ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு |
உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாவான 78வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. வருகிற 24ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு விழாவிலும் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், அலியா பட், ஜான்வி கபூர் ஆகியோர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடக்கவிருக்கிறார்கள். அலியா பட் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
கடந்த 2003ம் ஆண்டு கேன்ஸ் நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற இயக்குநர் பயால் கபாடியா இந்த ஆண்டு விழாவில் ஜூரியாக பணியாற்ற இருக்கிறார்.
தொடக்க விழாவில் நடிகை ஊர்வசி ரவுட்டேலாதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார் ஊர்வசி. அவர் கையில் இருந்த கிளி வடிவிலான பர்ஸ் பலரையும் கவர்ந்தது. அந்த கிளி பர்ஸின் விலை 4 லட்சத்து 68 ஆயிரம் என்கிறார்கள்.
இந்த விழாவில் போட்டி பிரிவிலும், பொது பிரிவிலும் பல இந்திய படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.