பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
மேடை மற்றும் தொலைக்காட்சிகளில் மிமிக்கிரி கலைஞராக வளர்ந்து அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர் கொல்லம் சுதி. 2015ம் ஆண்டு வெளியான 'காந்தாரி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்', 'குட்டநாடன் மர்ப்பப்பா', 'கேசு ஈ வீட்டை நாடன்', 'எஸ்கேப்', 'ஸ்வர்கத்திலே காட்டுறும்பு' 'கொல்லம்' உள்ளிட்ட பல படங்களில் சுதி நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் திரிச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்றில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதி உயிழந்தார். சுதிக்கு வயது 39. சுதியின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.