ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 2018 என்கிற திரைப்படம் வெளியாகி கேரளாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளதுடன் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. இதுவரை 160 கோடிக்கு மேல் உலக அளவில் வசூலித்துள்ள இந்த படம் கேரளாவில் மட்டும் 80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், ஆசிப் அலி, நரேன் உள்ளிட்ட பல மலையாள நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் டொவினோ தாமஸ் கதையின் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருந்தார். மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் பெற்றார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தன்னை அழைத்தபோது முதலில் தான் நடிக்க மறுத்துவிட்டேன் என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் டொவினோ தாமஸ்
இதுகுறித்து அவர் கூறும்போது, “கடந்த 2018ல் கேரளாவில் மிகப்பெரிய அளவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நானும் சக மனிதனாக மீட்பு பணிகளில் இறங்கி எனது பங்களிப்பை அளித்தேன். ஆனால் என்னை மிகப் பெரிய ஹீரோ போல அந்த சமயத்தில் சித்தரித்தார்கள். சினிமா நடிகன் என்பதாலேயே எனக்கு அப்படி தனி நபராக பாராட்டப்படுவதில் விருப்பமில்லை என்பதை நான் தெரிவித்தேன்.
ஆனால் அந்த சமயத்தில் நான் தெரிவித்த கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டு அதற்கு வருத்தப்படும் விதமாக எதிர் கருத்துகளும் வந்தன. அதனால் இந்த படத்தில் இப்போது நடிப்பது சரியாக இருக்காது என நான் இயக்குனரிடம் கூறினேன். ஆனால் அவர் என்னை கன்வின்ஸ் செய்து இந்த படத்தில் நடிக்க வைத்தார். அப்படி அவர் செய்திருக்காவிட்டால் ஒரு அற்புதமான படத்தில் நடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டிருப்பேன் என்பதை இப்போது உணர்கிறேன்” என்று கூறியுள்ளார் டொவினோ தாமஸ். .