அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

இந்த வருட துவக்கத்திலேயே தெலுங்கு திரையுலகில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி என்கிற படத்தின் மூலம் தனது வெற்றியை அழுத்தமாக பதிய வைத்து விட்டார் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி என்பவர் இயக்கி இருந்தார். இதையடுத்து பாலகிருஷ்ணா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத அவரது 108 ஆவது படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி என்பவர் இயக்குகிறார்.
ஏற்கனவே விவேக் ஓபராய், சைப் அலிகான் என தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து பிரபலமான நடிகர்களை அழைத்து வந்து தென்னிந்திய படங்களில் வில்லனாக்கும் வரிசையில் இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் வில்லனாக அறிமுகமாகிறார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்ல, நடிகர் அர்ஜுன் ராம்பாலும் தன் பங்கிற்கு, முதன்முதலாக தெலுங்கில் தான் அடி எடுத்து வைக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.