சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாள சினிமாவில் போதை பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடங்குவதற்குள் அடுத்த அதிரடியாக மலையாள சினிமாவில் வெளிநாட்டு கருப்பு பணம் புழங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. 4 தயாரிப்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் சோதனையில் மலையாள திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரிடம் இருந்து அமலாக்கத்துறை 25 கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களை வெளியிட்ட சில மலையாள ஊடகங்கள் மற்றும் யு டியூப் சேனல்கள் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியது நடிகர் பிருத்விராஜ் என்று செய்தி வெளியிட்டன.
இது குறித்து பிருத்விராஜ் வெளியிட்ட பதிவு : ‛‛பொதுவாக இம்மாதிரியான செய்திகளை நான் கடந்து செல்வதே வழக்கம். ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு. வரம்பு மீறிய இந்த அபாண்ட செய்திக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறேன்” என கோபமாக அறிவித்துள்ளார்.