பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா அல்லது இதே ஆட்சி தொடருமா என்கிற பரபரப்பு நிறைந்த தேர்தலாக கருதப்படுகிறது. அதனால் இந்த தேர்தலில் பலரும் ஆர்வத்துடன் ஓட்டளிப்பதை காண முடிந்தது. திரையுலக பிரபலங்களும் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருவதுடன், மக்களையும் ஓட்டுச்சாவடிக்கை வந்து ஓட்டளிக்க உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காந்தாரா படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வரிசையில் நின்று தனது ஓட்டை செலுத்தி உள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ரிஷப் செட்டி, “நாம் ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்கிறோம் என்பதற்காக பெருமைப்பட வேண்டும். மேலும் ஓட்டளிப்பது என்பது நமது உரிமை மட்டுமல்ல நமது பொறுப்பும் கூட. ஒரு நல்ல சமூகத்தை கட்டமைப்பதற்காக ஒவ்வொருவரும் சரியான நபரை தேர்ந்தெடுத்து ஓட்டளிக்க வேண்டியது அவசியமாகும். கர்நாடகாவின் வளமான எதிர்காலத்திற்காக நான் ஓட்டளித்துள்ளேன். நீங்கள் ஓட்டளித்து விட்டீர்களா..?” என்று மற்றவர்களின் ஓட்டளிக்க உற்சாகப்படுத்தியுள்ளார் ரிஷப் ஷெட்டி.