கடந்த வாரம் ஒரு வாரிசு அறிமுகம், இந்த வாரம் மற்றொரு வாரிசு அறிமுகம் | கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் 'ஹனு- மேன்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி விஎப்எக்ஸ் பணிகள் நிறைவடையாததால் படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்திருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர்கள் இது தொடர்பாக கூறும்போது “ஹனு-மேன் படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு சிறந்த படைப்பை வழங்குவதற்கான எங்களுடைய பொறுப்பையும் உயர்த்தி இருக்கிறது. நாங்கள் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான திரைப்படத்தை வழங்குவோம் என வாக்களிக்கிறோம். பெரிய திரையில் பார்க்கத் தகுந்த படமாக உருவாக்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பிரமாண்ட தியேட்டர் அனுபவத்தை பெற கூடுதலாக சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். புதிய வெளியீட்டு திகதியை விரைவில் அறிவிக்க அறிவிக்கிறோம்” என்றனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. தேஜா சஜ்ஜாவுடன் அமிர்தா ஐயர் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.