இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் |

வினோத் இயக்கும் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே மீண்டும் இதில் இணைந்துள்ள நிலையில், ஸ்ருதிஹாசன், மமிதா பைஜூ, பாபி தியோல் என பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் உலக அளவில் புகழ்பெற்ற ராப் இசை பாடகர் ஹனுமான் கைண்ட் என்பவர் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஒரு பாடல் பாடி உள்ளேன். இன்னும் தமிழ் படங்களுக்காக நிறைய பாடல்கள் பாட போகிறேன். பல அதிரடி சம்பவங்கள் காத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இவர் பாடிய பிக் டாக்ஸ் என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.




