அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் விபத்து, உயிரிழப்பு, தயாரிப்பாளர், இயக்குனர் மோதல் என ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்திற்கு வந்துள்ளது. ஆனாலும், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
கமல்ஹாசன், ஷங்கர் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் இப்படம் 'விக்ரம்' வசூலை முறியடிக்கும் அளவில் இருக்கும் என இப்போதே ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக ஷங்கர் அவரது படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆற அமர பொறுமையாகத்தான் செய்வார். அதோடு தெலுங்கிலும் அவர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் வேலைகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
ரஜினியின் 'ஜெயிலர்' படத்திற்கான வெளியீட்டு அறிவிப்பு வந்துவிட்ட நிலையில் 'இந்தியன் 2' பட வெளியீட்டு அறிவிப்பும் வராதா என கமல் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு வருமா அல்லது 2024 பொங்கலுக்கு வருமா என்பதுதான் தற்போயை கேள்வி.