கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
புதியவர்கள் இணைந்து 'தி கிரேட் இந்தியன் கம்பெனி' என்ற தலைப்பில் வெப் தொடர் ஒன்றை உருவாக்குகிறார்கள். ஜனனி அசோக் குமார், விஷ்ணு, ஆர்ஜே சரித்திரன், சவுந்தர்யா நஞ்சுண்டான், வினோத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் சிதம்பரம் மணிவண்ணன் கூறும்போது, “பரபரப்பான சென்னையை களமாகக் கொண்டு, இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்கி விற்கும் நிறுவனமான 'தி கிரேட் இந்தியன் கம்பெனி'யின் கதையையும் அதன் பணியாளர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை கலந்து பேசும் தொடர் இது. தங்கள் நிறுவனம் சந்திக்கும் சவால்களையும் தங்கள் தனிப்பட்ட வாழ்வின் பிரச்னைகளையும் கூட்டாக எப்படி அந்தப் பணியாளர்கள் சமாளிக்கிறார்கள் என்பதே இந்தத் தொடரின் சாராம்சம்” என்றார்.
இந்த தொடரை வெளியிடும் ஆஹா தளத்தின் துணை தலைவர் கவிதா சவுபின் கூறும்போது “பார்வையாளர்களுக்கு புதுமையான படைப்புகளை வழங்குவதில் ஆஹா தமிழ் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. பேட்டைக்காளி, ரத்தசாட்சி, உடன்பால் போன்ற படைப்புகளே அதற்கு சாட்சி. புதுமுயற்சியாக தினத் தொடர் ஒன்றை அறிமுகப்படுத்துகிறோம். இந்தத் தொடர் பார்வையாளர்களின் ரசனையை மாற்றியமைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்றார்.