Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நம்ப வைத்து பணம் பறித்தார், சாதி ரீதியாக திட்டுகிறார்.... - விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

25 ஏப், 2023 - 12:15 IST
எழுத்தின் அளவு:
A-Woman-lawyer-complaint-against-Vikraman

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விக்ரமன், தன்னை சமூகநீதி அரசியல் பேசும் அரசியல்வாதியாக காண்பித்து கொண்டார். விசிக கட்சியின் உறுப்பினரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பேசிய கருத்துகளை கேட்டு பலரும் விக்ரமனை தலைமேல் வைத்து கொண்டாடினர். ஆனால், நிஜவாழ்வில் அவர் அப்படி நடந்து கொண்டாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.



சமூக செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இதுதொடர்பாக விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், விக்ரமன் பலமுறை கிருபாவை வேசி எனக்கூறி பலமுறை ஆபாச வாத்தைகளால் திட்டியதாகவும், கணவன் மனைவியாக வாழ்வது போல் நம்ப வைத்து பணம் பறித்ததாகவும் கூறியுள்ளார். விசிகவில் உள்ள தலித் ஆண்களை வைத்து வன்புணர்வு செய்துவிடுவார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், விக்ரமன் அவர் சாதியை உயர்த்தி பேசி கிருபாவை ஜாதிய ரீதியில் கொச்சைப்படுத்தியதாகவும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் விக்ரமனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அடுத்தக்கட்டமாக போலீசில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோல் கிருபாவின் கடிதத்தில் விக்ரமனுக்கு எதிராக பல புகார்களை கிருபா முனுசாமி கூறியுள்ளார்.



இந்த கடிதமானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் 'இதுதான் உன் சமூக நீதியா விக்ரமன். குற்றசாட்டுக்கு பதில் சொல்லு' என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் இந்த கடிதம் உள்நோக்கம் கொண்டது, விக்ரமன் அப்படிப்பட்டவர் அல்ல, வேண்டுமென்றே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என விக்ரமின் ஆதரவாளர்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தந்தைக்கு பைக் பரிசளித்த ஜி.பி.முத்துதந்தைக்கு பைக் பரிசளித்த ... குழந்தையை தத்தெடுக்க போகிறாரா ரச்சிதா? இன்ஸ்டாகிராமில் கூறிய தகவல் குழந்தையை தத்தெடுக்க போகிறாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27 ஏப், 2023 - 12:41 Report Abuse
கல்யாணராமன் சு. இந்த புகார் மனுவை படிக்கும்போது பல கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை ... "கணவன் மனைவியாக வாழ்வதாக நம்பவைத்து..." அம்மையார் இருப்பதோ லண்டனில். அய்யாவோ, இந்தியாவில் .. அப்படியிருக்கையில் மேற்கண்ட கூற்று எவ்வாறு சாத்தியம் ? இரண்டாவதாக, மத்திய (இல்லையில்லை, ஒன்றிய அரசு அப்படி சொன்னாதான் திருமாவளவனுக்கு பிடிக்கும் ) அரசின் உதவியில் வெளிநாடு சென்று படிக்கும் பெண்ணிற்கு காதலனுக்கு (கணவனுக்கு?) கொடுக்குமளவுக்கு 12 லட்சம் பணம் எங்கிருந்து வந்தது ?? அந்த அளவுக்கு பணம் வைத்திருப்பவர் எதற்காக ஒன்றிய அரசின் உதவியை பெறவேண்டும் ? முனைவர் படிப்பிற்கு அந்த பல்கலையே பண உதவி செய்யுமே ? மூன்றாவதாக, மூன்று வருடங்களாக சாதியை பற்றி இழிவாக பேசி, தனிமனித ஒழுக்கத்தையும் இழித்து பேசிய "காதலன்/கணவன்" ஐ எப்படி இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டார் ? கடைசியாக, சாதியை ஏன் "ஜாதி" என்ற வடமொழியை வைத்துக் குறிப்பிடுகிறார் ? "சாதி" என்றே சொல்லலாமே ?? "உலகளாவிய, நாடளாவிய, புகழ் பெற்ற ..." போன்ற பட்டங்களால், வர்ணனைகளால் சுயமரியாதை அதிகம் உள்ளவர் என்று காட்டிவிட்டார் ...........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in