சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
சின்னத்திரை நடிகர்களான அரவிஷ் குமாரும், ஹரிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். கடந்த வருடத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அரவிஷ் ஹரிகா அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். தலை பொங்கலை கொண்டாடியுள்ள அவர்கள், அதன்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்களின் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
இதேப்போல் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான விக்ரமன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ப்ரீத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது தலை பொங்கலை கொண்டாடியுள்ள அவர் தன் மனைவியுடன் பொங்கல் விடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பொங்கல் வாழ்த்துகள் கூறியுள்ளார்.