குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலெட்சுமிக்கு 'சரவணன் மீனாட்சி' தொடருக்கு பின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து கடந்த 2013 ஆண்டும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து கடந்த சில மாதங்களாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியே வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. அந்த தீர்ப்பை வரவேற்று இன்ஸ்டாகிராமில், 'இதுபோதும். இனி இதிலிருந்து பார்த்துகொள்ளலாம்' என ரச்சிதா பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே சொன்னது போல் ரச்சிதா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் என்பது இந்த பதிவின் மூலம் தெரியவருகிறது.