அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விக்ரமன், தன்னை சமூகநீதி அரசியல் பேசும் அரசியல்வாதியாக காண்பித்து கொண்டார். விசிக கட்சியின் உறுப்பினரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பேசிய கருத்துகளை கேட்டு பலரும் விக்ரமனை தலைமேல் வைத்து கொண்டாடினர். ஆனால், நிஜவாழ்வில் அவர் அப்படி நடந்து கொண்டாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இதுதொடர்பாக விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், விக்ரமன் பலமுறை கிருபாவை வேசி எனக்கூறி பலமுறை ஆபாச வாத்தைகளால் திட்டியதாகவும், கணவன் மனைவியாக வாழ்வது போல் நம்ப வைத்து பணம் பறித்ததாகவும் கூறியுள்ளார். விசிகவில் உள்ள தலித் ஆண்களை வைத்து வன்புணர்வு செய்துவிடுவார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், விக்ரமன் அவர் சாதியை உயர்த்தி பேசி கிருபாவை ஜாதிய ரீதியில் கொச்சைப்படுத்தியதாகவும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் விக்ரமனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அடுத்தக்கட்டமாக போலீசில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோல் கிருபாவின் கடிதத்தில் விக்ரமனுக்கு எதிராக பல புகார்களை கிருபா முனுசாமி கூறியுள்ளார்.
இந்த கடிதமானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் 'இதுதான் உன் சமூக நீதியா விக்ரமன். குற்றசாட்டுக்கு பதில் சொல்லு' என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் இந்த கடிதம் உள்நோக்கம் கொண்டது, விக்ரமன் அப்படிப்பட்டவர் அல்ல, வேண்டுமென்றே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என விக்ரமின் ஆதரவாளர்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.