பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வந்தார். இரண்டு மனைவிகளுக்கிடையே மாட்டிக்கொண்டு அல்லல்படும் நபராக கோபி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோபி கதாபாத்திரத்தை வைத்தே பல மீம்ஸ்களும் டிரெண்டானது. அந்த அளவிற்கு புகழ் பெற்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சதீஷுக்கு பல தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் ரஞ்சித் புது ஹீரோவாக என்ட்ரி கொடுக்க தனது போர்ஷன் குறைக்கப்படலாம் என சதீஷ் வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகுவதாக கூறிய அவர், நான் நடித்த எபிசோடுகள் 10,15 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என சோகத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். சதீஷின் இந்த திடீர் முடிவால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.




