இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

எம்.எஸ்.மூர்த்தி இயக்கத்தில் ‛சரவணன் மீனாட்சி' புகழ் ரச்சிதா மகாலட்சுமி நடித்த ஹாரர் படம் 99/66. இதில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா முக்கியமான வேடத்தில் வருகிறார். சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோரும் நடித்துள்ளனர்.
சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு "99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு" என்று பெயர் வைத்துள்ளோம். அந்தக் குடியிருப்பில் நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் குடியிருப்பு வாசிகளை அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்துகின்றன. அவை ஏன் நடைபெறுகின்றன? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதை ஹாரர் கலந்து சொல்லி இருக்கிறோம்
இதுவரை சினிமாவில் காட்டப்படாத வகையில் இதில் ஐநூறு புத்த பிக்குகள் நடித்துள்ளனர். இதற்காக அரசு அனுமதியை பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கினோம். இந்த படத்தின் மூன்று விதமான ஆன்மிகம் சார்ந்த பாடல்கள் இடம்பெற இருக்கிறது. அதில் "அருவா மீசை காரன்" என்ற கருப்பசாமி பாடலும், "யாரு பிள்ளையாரு" என்ற விநாயகர் பாடலும் வெளியாகி உள்ளது. மார்ச் 6ல் ரிலீஸ் என்கிறார் இயக்குனர்.