மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‛குபேரா'. இப்படத்தில் தனுசுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த குபேரா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஜூன் 20ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. மேலும் தனுஷ் திரைப்பயணத்தில் 23வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், குபேரா படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயருடன் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளார்கள்.
அதில், இப்படத்தில் தனுஷ், தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் கடற்கரையோரம் தனுஷ் நடந்து செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் ‛கடந்த 23 ஆண்டுகளாக கடின உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு பயணம் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. குபேராவில் தனுஷ் தேவாவாக மனதை கவர தயாராக உள்ளார். அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு விரைவில் காத்திருங்கள். ஜூன் 20ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகிறது' என்றும் பதிவிட்டுள்ளார்கள்.