விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

சின்னத்திரை தொடரில் இணைந்து நடித்த அர்னவும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு அர்னவ் இன்னொரு நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் செய்தார் திவ்யா. அந்த புகாரின் பேரில் அர்னவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவரை விட்டு பிரிந்த திவ்யா அதன்பிறகு ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த நிலையில் அர்னவ் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறியுள்ளார். திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு என்றும், அவர்தான் தன்னை துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. திவ்யா போலீசில் புகார் செய்தபோது  திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்னவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, அர்னவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அர்னவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            