175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
சின்னத்திரை நடிகர்கள் திவ்யா ஸ்ரீதரும், அர்னவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தபோது இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். தனியாக வசித்து வந்த திவ்யா ஸ்ரீதர் அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், அர்னவ் அண்மையில் அளித்த பேட்டியில், 'என் குழந்தையை நேரில் சென்று பார்க்க பயமாக இருக்கிறது. அட்லீஸ்ட் வீடியோ காலில் காட்டினால் கூட சந்தோஷப்படுவேன். என் குழந்தையை பார்க்கவோ, வளர்க்கவோ வாய்ப்பு கிடைத்தால் என் குழந்தையை மட்டும் அழைத்துக் கொள்வேன். என் அம்மா, அப்பா பேச்சை மீறி திவ்யாவை திருமணம் செய்தேன். ஆனால், நான் என் பெற்றோர் பேச்சை கேட்டிருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.