50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் |
தமிழ் சினிமாவின் சீனியர் நடிகையான அர்ச்சனா 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் சமீபகாலமாக மோசமான திரைக்கதையுடன் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து விலகுவதாக அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக அறிவித்து வெளியேறிவிட்டார். சீரியலின் கதை போக்கும், கதாபாத்திரத்தின் நகர்வும் அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியதாகவும் இதனால் ஏற்பட்ட அதிருப்தியினால் கொஞ்ச நாளாகவே சீரியலில் இருந்து தன்னை நீக்கிவிடுமாறும் அர்ச்சனா கூறி வந்தாராம். ஆனால், சீரியல் குழு பல காரணங்களை அர்ச்சனா வெளியேறவிடாமல் தடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ப்ராஜெக்ட்டில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமா? என்று யோசித்த அர்ச்சனா சீரியலிலிருந்து வெளியேறுவது தான் நல்லது என சீரியலிலிருந்து வெளியேறிவிட்டாராம். தற்போது அர்ச்சனா நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்க போகிறார் என பலரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.