விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! |
சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து சென்றது. செல்லம்மா தொடரில் நடித்து வரும் அன்ஷிதா என்ற நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அர்னவ் தன்னை கழட்டிவிட முயற்சிப்பதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா ஸ்ரீதர் புகார் கூறினார். அதேசமயம் திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு அன்ஷிதா எந்த மறுப்பும் அப்போது சொல்லவில்லை.
அதேசமயம் அர்னவ் அன்ஷிதாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார். இருவரும் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் தற்போது இருவரும் வெளியிட்டுள்ள ஒரு ரீல்ஸ் வீடியோவில் 'என் சொந்தமெல்லாம் நீதான் என்பது போல்' அன்ஷிதா அர்னவை பிடித்து இழுத்து நெருக்கமாக நின்று போஸ் கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள் திவ்யா ஸ்ரீதர் அர்னவ்-அன்ஷிதா பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தான் என அதிர்ந்து போயுள்ளனர்.