கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
வினோத் இயக்கத்தில், அஜித், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் இந்த வருடப் பொங்கலுக்கு வெளியான படம் 'துணிவு'. விஜய் நடித்த 'வாரிசு' படமும், இந்தப் படமும் ஒன்றாக வெளியானது. 'வாரிசு' படத்தை விடவும் 'துணிவு' படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் 'துணிவு' படம் 100 நாளைக் கடந்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் போலியான போஸ்டர் ஒன்று சுற்றி வருகிறது. அதில் சில தியேட்டர்களையும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்தத் தியேட்டர்களில் அப்படம் ஓடவேயில்லை. எதற்காக இப்படி வீண் விளம்பரத்தை அஜித் ரசிகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியானது. அதன்பின் சில நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் ஒடியது. மார்ச் முதல் வாரத்தில் இப்படம் 50 நாளைத் தொட்டது. அதற்கான போஸ்டர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்திற்கான அறிவிப்பை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.