கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
உலக அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் முதன்மையான விருதாக ஆஸ்கர் விருது இருக்கிறது. இந்தத் தலைமுறைக்குத் தெரியும் விதத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வாங்கியவர் ரசூல் பூக்குட்டி. சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை வாங்கியவர்கள் தயாரிப்பாளர் குனித் மோங்க, இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ்.
இவர்கள் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் குனித்மோங்கா பதிவிட்டு, “ஒரே படத்தில் 5 ஆஸ்கர்ஸ்' என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அப்புகைப்படத்தைப் பார்க்கும் போது ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்களும்தான் எனப் புரிகிறது. சிறந்த டாகுமென்டரி குறும்படமான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படத்தை குனித் மோங்கா தயாரிக்க கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கியிருந்தார். ரகுமான், ரசூல் பூக்குட்டியுடன் இரண்டு பெண்களும் இணைந்து நின்றிருப்பதைப் பார்த்து பெண்களும் பெருமைப்பட வேண்டும்.