எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
இந்தாண்டு பொங்கலுக்கு வாரிசு, துணிவு படங்கள் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்றன. இரண்டு படங்களும் இந்தாண்டின் 50 நாட்களை கடந்த படமாக அமைந்துள்ளது.
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் மற்றும் பலர் நடித்து இந்த வருட பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படம் 300 கோடி வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த வாரம் 'வாரிசு' படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஓடிடியில் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையிலும் படம் சென்னை, கோவை ஆகிய ஊர்களில் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது.
இப்படத்துடன் வெளிவந்த அஜித் நடித்த 'துணிவு' படம் இருபது நாட்களுக்கு முன்பே ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் 'துணிவு' திரைப்படம் இன்னும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பெங்களூரு ஆகிய ஊர்களில் சில தியேட்டர்களில் 50வது நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விஜய் 'வாரிசு' படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படமான 'லியோ' படத்தில் நடிக்கப் போய்விட்டார். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது.