கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கேடி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்கே தியாகராஜ பாகவதர். பேசாப் படமாக இருந்த சினிமா, பேசும் தமிழ் சினிமாவாக மாறிய பின் எம்கேடி-யின் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
1934ம் ஆண்டு வெளிவந்த 'பவளக்கொடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். 14 திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். அதில் “பவளக்கொடி, நவீன சாரங்கதாரா, சத்யசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ்” ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதிலும் 'ஹரிதாஸ்' படம் 1944ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மூன்று தீபாவளியைப் பார்த்த படம் என்ற பெருமையுடன் 1946 தீபாவளி வரை ஓடியது.
அந்தக் காலத்தில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் என்பவர் அவரது பத்திரிகையில் சினிமா பிரபலங்களைப் பற்றி தாறுமாறாக எழுதியவர். அவர் ஒரு நாள் சென்னை, புரசைவாக்கத்தில் கத்தியால் குத்தப்பட்டு மறுநாள் மருத்துவமனையில் மரணமடைந்தார். அந்த வழக்கை விசாரித்த காவல் துறை, நடிகர் எம்கே தியாகராஜ பாகவதர், நடிகர் என்எஸ் கிருஷ்ணன், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தது. 1944ம் ஆண்டு கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எம்கேடி, என்எஸ்கே தொடர்ந்து மேல் முறையீடு செய்து 1947ம் ஆண்டு விடுதலை பெற்றனர்.
அந்த வழக்குகளின் காரணமாக தனது சொத்துக்கள், பெயர், புகழ் அனைத்தையும் இழந்து வறுமைக்குத் தள்ளப்பட்டார் எம்கேடி. உடல்நலக் குறைவு ஏற்பட்டு 1959ம் ஆண்டு தனது 49வது வயதிலேயே மரணமடைந்தார் எம்கேடி.
அவருக்கு இன்று 114வது பிறந்தநாள். அதை முன்னிட்டு இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், “தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார். புகழின் உச்சம் கண்டவர். மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். Last reel மிக மோசமான சோகம்! பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்” என எம்கேடி பற்றிய பயோபிக் படத்தை எடுக்க வேண்டும் என்ற அவருடைய ஆசையை வெளியிட்டுள்ளார்.