ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
2023ம் ஆண்டின் மூன்றாம் மாதம் இன்று ஆரம்பமாகிறது. கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 25 படங்கள் வரை வெளிவந்துள்ளன. அவற்றில் 'வாரிசு, துணிவு, வாத்தி, டாடா' ஆகிய நான்கே படங்கள்தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
இந்த மாதம் பள்ளிகளுக்கான தேர்வு மாதம் என்று இருந்தாலும் பல படங்கள் வெளிவர உள்ளன. இந்த முதல் வாரத்திலேயே மார்ச் 3ம் தேதி 6 படங்கள் வெளியாக உள்ளன.
புதுமுகம் இஷான் நடித்துள்ள 'அரியவன்', சசிகுமார் நடித்துள்ள 'அயோத்தி', பிரபுதேவா நடித்துள்ள 'பாகீரா', சிறிய நடிகர்கள் நடித்துள்ள 'கிடுகு', அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள 'பல்லு படாம பாத்துக்க', அசோக் நடித்துள்ள 'விழித்தெழு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்கான முன்பதிவு ஆரம்பமாகிவிட்டாலும் குறிப்பிடும்படி இல்லை.
பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள், சிறிய நடிகர்களின் படங்கள் வெளியாவது ரசிகர்களை சரியாகச் சென்று சேராததே இதற்குக் காரணம் என கோலிவுட்டிலேயே நொந்து போய் சொல்கிறார்கள்.