விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் 2023ம் ஆண்டு கொஞ்சம் நம்பிக்கைக்குரிய ஆண்டாகத் தெரிகிறது. கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த 90 படங்களில் நான்கு சிறிய படங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பே அதற்குக் காரணம். பெரிய நடிகர்களின் படங்களுக்குத்தான் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருகிறார்கள். மற்ற நடிகர்களின் படங்களையும், சிறிய பட்ஜெட் படங்களையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
அதையும் மீறி நல்ல கதையம்சம் இருந்தால் அந்தப் படங்களை நாங்கள் பார்க்கத் தவறுவதில்லை என அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள் மக்கள். கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த படங்களில் 'டாடா, அயோத்தி, குட் நைட்' ஆகிய மூன்று சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பையும், குறிப்பிடத்தக்க வசூலையும் பெற்றன. அதற்கு முக்கியமான காரணம் அதில் இருந்த கதையம்சம், இயல்பான கதாபாத்திரங்கள், சுவாரசியமான, நெகிழ்வான காட்சிகள் ஆகியவற்றைச் சொல்லலாம்.
அந்தப் படங்களின் வரிசையில் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'போர் தொழில்' படமும் இடம் பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும், விமர்சகர்களின் வரவேற்பும் ஒரு சேரக் கிடைத்துள்ளது. படம் வெளியான நாளில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பெரிய தியேட்டர்கள், அதிகமான காட்சிகள் கிடைக்காத இந்தப் படத்திற்கு அடுத்த இரண்டு நாட்களிலேயே பெரிய தியேட்டர்கள், அதிகக் காட்சிகள் கிடைத்துள்ளது.
'பொன்னியின் செல்வன் 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் விளம்பரங்களில், புரமோஷன்களில் சரத்குமாருக்கு முக்கியத்துவம் தரவில்லை. அந்தக் குறையை சரத்குமாருக்கு இந்தப் படம் முழுவதுமாக போக்கியிருக்கிறது. படத்தின் இரண்டு கதாநாயகர்களில் அவரும் ஒருவர் என்று சொல்லும் விதத்தில் படம் முழுவதும் வருகிறார். இப்படத்தின் வெற்றி அவருக்கு இன்னும் பல வாய்ப்புகளை பெற்றுத் தரும்.