கூலி படத்தின் சண்டைக்காட்சி லீக் : லோகேஷ் கனகராஜின் வருத்தமான பதிவு | பெப்சி வரம்பு மீறுகிறது: நடிகர் சங்கம் எச்சரிக்கை | ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் |
மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்தாண்டு வெளியான படம் அயோத்தி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு பல வருடங்களுக்கு பிறகு சசிகுமாருக்கு ஒரு ஹிட் படமாகவும் அமைந்தது. குறிப்பாக, மனித நேயத்தை வெளிப்படுத்தும் கதையம்சத்தில் இப்படம் உருவானது.
இந்த நிலையில் மீண்டும் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அயோத்தி வெற்றிப்பட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.