175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு. குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 'தொங்கா தொங்காடி' படத்தின் மூலம் ஹீரோவாகி அதன்பிறகு 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது 'அகம் பிரம்மாஸ்மி', 'வாட் த பிஸ்' படங்களில் நடித்து வருகிறார்.
மனோஜ் மஞ்சுவுக்கும் பிரணதி ரெட்டி என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த நிலையில் மனோஜ் மஞ்சுவும் ஆந்திர அரசியல்வாதி பூமா நாகிரெட்டியின் மகளான பூமா மவுனிகாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு குடும்பத்தாரும் பச்சைகொடி காட்டிவிட்டதால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். மனோஜ் மஞ்சுவுக்கு மட்டுமல்ல பூமா மவுனிகாவுக்கும் இது 2வது திருமணம் ஆகும்.