இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் |
பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'பஹிரா' நாளை மறுநாள் (மார்ச் 3) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு ஹீரோயின்கள் ஜோடியாக நடித்துள்ளனர். அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் மற்றும் பிரகதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பஹிராவில் நடித்தது குறித்து ஹீரோயின்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
காயத்ரி : பிரபுதேவா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒருவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னை மாஸ்டருடன் நடனமாட அனுமதிக்கவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம் தான். இந்த படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் இருந்து வெளியேறி இருக்கிறேன். அனைவருக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்காக இருக்கும்.
ஜனனி : இதற்கு முன்பு நான் நடித்தப் படங்களை விட இது வித்தியாசமானது. பிரபுதேவாவுடன் பணிபுரிந்திருப்பதன் மூலம் எனது நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது. அவர் இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து பெரிய நட்சத்திரங்களுடனும் பணிபுரிந்திருந்தாலும், அவர் செட்டில் மிகவும் பணிவாகவும் எளிமையாகவும் இருந்தார். என்னை இந்தப் படத்திற்காக அணுகியபோது, எனது கதாபாத்திரம் திரையில் குறைந்த நேரமே வரும் எனவும், ஆனால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் குறிப்பிட்டார்கள். இந்த படத்தில் இத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் கேட்பைட் இல்லை.
சஞ்சிதா ஷெட்டி : எனது கேரியரில் மிகவும் சிறப்பான படம். படத்தில் பல ஹீரோயின்கள் இருந்தாலும், படப்பிடிப்பில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரபுதேவா இந்த படத்திற்காக வெவ்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார். மேலும், வெவ்வேறு எனர்ஜியையும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கொடுத்துள்ளார். இது தியேட்டர்களிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் எதிரொலிக்கும்.
சாக்ஷி அகர்வால் : 7 ஹீரோயின்கள் கொண்ட ஸ்கிரிப்ட் எனும்போது அந்த எண்ணம் எனக்கு புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் இயக்குனர் எங்கள் அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து, முழு படத்தையும் சாமர்த்தியமாக கையாண்டார்.