'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

ஒரு வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை உடனுக்குடன் எடுத்து ஹிட் கொடுப்பது என்பது வேறு. அதுவே 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து ஹிட் கொடுப்பது என்பது வேறு. இரண்டாவதில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம். இயக்குனர் ஷங்கரும், நடிகர் கமல்ஹாசனும் இந்த இரண்டாவது முயற்சியில் இறங்கி இந்தியன் 2 படத்தில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார்கள். சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு தைவான் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் ஒரு மிகப்பெரிய ரயில் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சியை படமாக்கி உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு தற்காலிகமாக படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் ஷங்கர். இதைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது தான் இயக்கி வரும் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க கிளம்பி விட்டதாகவும், மீண்டும் ஒரு மாதம் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்க இருப்பதாகவும் கூறியுள்ளார் ஷங்கர். மேலும் படப்பிடிப்பின்போது கமலிடம் இருந்து தான் விடை பெற்றுக்கொள்ளும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஷங்கர்.