பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர் நடன இயக்குனர் அமீர். இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நடிகை பாவனியும், அமீரும் இந்த நிகழ்ச்சியில் நெருக்கமானார்கள். தொடர்ந்து போட்டியை விட்டு வெளியே வந்ததும் காதலித்தார்கள். அஜித்தின் துணிவு படத்தில் இருவரும் சேர்ந்தே நடித்தனர். ரியாலிட்டி ஷோவிலும் நடனமாடினார்கள்.
இந்த நிலையில் தற்போது அமீர் - பாவனி ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அமீரே இயக்கவும் செய்கிறார். சபீர் இசையமைக்கிறார். அமீர் - பாவனி உடன் மன்சூர் அலிகான், காயத்திரி ஜெயராம், சுரேஷ் சக்ரவர்த்தி, சாதனா, விடிவி கணேஷ், அலீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். முழுக்க முழுக்க ரொமான்ஸ் காமெடியாக உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. விரைவில் அழகான புரமோ வீடியோவை வெளியிட உள்ளனர்.




