பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் |
ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், நானி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தெலுங்குப் படம் 'தசரா'. இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டார்கள்.
தற்போது இப்படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். நானி கதாநாயகனாக நடித்த படமொன்று 100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. நானி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பு, சந்தோஷ் நாராயணன் இசை, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு ஆகியவை இந்தப் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டது.
100 கோடி வசூலைக் கடந்ததன் மூலம் நானி, தெலுங்கு கதாநாயகர்கள் வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை மூன்றாம் கட்ட கதாநாயகனாக மட்டுமே இருந்த நானி, இந்தப் படத்தின் வெற்றி மூலம் முன்னணி கதாநாயகர்களுடனும் போட்டி போட ஆரம்பித்துள்ளார்.
'தசரா' படத்தை பல தெலுங்கு சினிமா பிரபலங்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.