படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் | வனிதா மீது தாக்குதல் : வருத்தம் தெரிவித்த பிரதீப் ஆண்டனி |
நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரின் மூத்த மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் ரஜினிகாந்த் 170வது படத்தை இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்குகிறார். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது .
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்தித்துள்ளார். ரஜினியின் 171வது படத்தை இயக்குமாறு லோகேஷ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிரூத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.