175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி தெலுங்குத் திரையுலகத்தின் இளம் காதல் ஜோடி எனப் பேசப்பட்ட ஒரு ஜோடி. சில மாதங்களுக்கு முன்பு கூட இருவரும் ஜோடியாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் தேவரகொண்டா எந்த ஒரு வாழ்த்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. இருவரும் பிரிந்ததே அதற்குக் காரணம் என டோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
ராஷ்மிகா சமீபகாலமாக மற்றொரு தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா சீனிவாசுடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த மாதம் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொன்டாவுக்கு பிறந்தநாள் வந்த போது அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் ராஷ்மிகா. ஆனால், நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்கு ஆனந்த் கூட வாழ்த்து சொல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தற்போது 'குஷி' படத்திலும், ராஷ்மிகா 'புஷ்பா 2' படத்திலும் நடித்து வருகிறார்கள்.