அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'விடுதலை பார்ட் 1'. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறது.
இப்படத்தைத் தெலுங்கில் 'விடுதலா' என்ற பெயரில் ஏப்ரல் 15ம் தேதி வெளியிடுகிறார்கள். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி தெலுங்குத் திரையுலகில் ஏற்கெனவே அறிமுகமான ஒரு நடிகர். வெற்றிமாறனின் படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டும், ரீமேக் ஆகியும் உள்ளன.
'பொல்லாதவன்' படம் 'குர்ராடு' என்ற பெயரிலும், 'அசுரன்' படம் 'நரப்பா' என்ற பெயரிலும் ரீமேக் ஆகி உள்ளது. இளையராஜாவின் இசை பற்றி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
தெலுங்கில் ஏப்ரல் 14 அன்று சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படம் வெளியாகிறது. அப்படத்துடன் 'விடுதலை' படமும் வெளியாவது ஆச்சரியம்தான். அல்லு அர்ஜுனின் அப்பா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தைத் தெலுங்கில் வெளியிடுகிறார்.