ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் ஜூலை 24ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ள படம் 'ஹரிஹர வீரமல்லு'. இப்படத்திற்கு எந்த 'கட்'டும் இல்லாமல் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று யு டியூப் தளத்தில் புதிய சாதனையைப் படைத்தது. தற்போது 51 மில்லியன் பார்வைகளை இதன் தெலுங்கு டிரைலர் கடந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் முகாலய கால கட்டத்தில் நடந்த கதையாக இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் பிரபாஸ், ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் பான் இந்தியா நடிகர்களாக பிரபலமடைந்துள்ளனர். தீவிர அரசியலில் இறங்கி தற்போது ஆந்திர துணை முதல்வராகவும் இருக்கும் இப்படத்தின் நாயகன் பவன் கல்யாண், இப்படம் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமாவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.




