ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
கர்நாடக மாநிலத்தில் டிக்கெட் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு ரூ.200 மட்டும் என கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று வெளியிட்ட ஆணை ஒன்றில், அனைத்து மொழிப் படங்களுக்கான, மல்டிபிளக்ஸ் உள்ளிட் அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட 200 ரூபாய்க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்த ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவைப் பொறுத்தவரை பெங்களூரூ உள்ளிட்ட மாநகரங்களில் சினிமா டிக்கெட் கட்டணம் என்பது மற்ற மாநிலங்களை விட அதிகம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வார நாட்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாட்களில் இன்னும் அதிகமான கட்டணமாக உள்ளது. ஐமாக்ஸ், 4டிஎக்ஸ் தியேட்டர்களில் 600 ரூ முதல் 1000 ரூ வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு இன்றைய நிலவரப்படி தற்போது ஓடிக் கொண்டிருக்கும் 'எப் 1' படத்திற்கு 4டிஎக்ஸ் தியேட்டர்களில் ரூ.800 கட்டணமும், ஐமாக்ஸ் தியேட்டர்களில் ரூ500 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.
2017ம் ஆண்டு தற்போதைய முதல்வர் சித்தராமையா முதல்வராக இருந்த போது இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இருந்தாலும் அவர்கள் தாங்களாக நிர்ணயித்த கட்டணங்களையே வசூலித்து வந்தனர். இருந்தாலும் அரசு அந்த விவகாரத்தில் அப்போது தீவிரம் காட்டவில்லை.
இதனிடையே, 2021ம் ஆண்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐமாக்ஸ், 4டிஎக்ஸ் வகை தியேட்டர்களுக்கான விலை நிர்ணயத்தை தியேட்டர்காரர்களே அமைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது. அது தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் அந்த விதிகளில் சில திருத்தங்களைச் செய்து தற்போது புதிய உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து மீண்டும் வழக்கு தொடரப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.