ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் |

கர்நாடக மாநிலத்தில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் எப்போதுமே மிக அதிகமாக இருக்கும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 800, 900, 1000 என்று கூட டிக்கெட் கட்டணங்கள் உண்டு.
அவற்றை முறைப்படுத்தி சில வாரங்களுக்கு முன்பு புதிய உத்தரவு ஒன்றை கர்நாடக மாநில அரசு பிறப்பித்தது. அதன்படி அதிகபட்ச கட்டணமாக ரூ 200 என நிர்ணம் செய்தது. 75 இருக்கைகள் கொண்ட பிரிமியர் தியேட்டர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஆணை பிறப்பித்தது.
இருந்தாலும் பிவிஆர் சினிமாஸ் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கத்தினர் கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் அரசின் உத்தரவுக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.
இதைத் தொடர்ந்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மீண்டும் அவர்களது விருப்பம் போல சினிமா டிக்கெட் கட்டணதை வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்த 'ஓஜி', அடுத்த வாரம் ரிஷப் ஷெட்டி நடித்த கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்கள் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால் பயன்பெறக் கூடிய முக்கிய படங்களாக இருக்கும்.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநில அரசு மேல்முறையீடு செய்யுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.




