ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் படத்தை இயக்கி, நடித்துள்ளார் . 'டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய நித்யா மேனன், ''இட்லி கடை படத்தில் முதன்முறையாக மாட்டு சாணத்தை என் கைகளால் சுத்தம் செய்தேன். சொல்லப்போனால், தேசிய விருது வாங்க செல்வதற்கு ஒரு நாள் முன்பு, அந்தக் காட்சியை செய்தேன். தேசிய விருதைப் பெறும்போது, என் விரல் நகங்களில் மாட்டு சாணம் இருந்தது. அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது'' என்றார்.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் உடன் நடித்த நித்யா மேனன், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை சமீபத்தில் பெற்றார்.