விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

டாப்ஸிக்கும் பிரச்சினைகளுக்கும் பல ஜென்ம தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. அடிக்கடி சர்சையில் சிக்குவார். தொடர்ந்து கங்னா ரணவத்துடன் மோதிக் கொண்டிருப்பார். இந்த முறை அவர் இந்து கடவுளை அவமதித்து சிக்கலில் சிக்கி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட டாப்ஸி கவர்ச்சியான உடை அணிந்து வந்தார். அவர் உடையை எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளட்டும், அரை குறை உடையுடன் கழுத்தில் பெண் கடவுள் லட்சுமி உருவம் பொறித்த நெக்லசையும் அணிந்திருந்தார்.
இது சர்ச்சையை கிளப்பியது. கவர்ச்சி உடையில் கடவுளின் உருவ நெக்லசை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். இந்த நிலையில் டாப்ஸி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து ரக்சக் சங்கதன் அமைப்பை சேர்ந்த எக்லவியா சிங் கவுர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில் “ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் டாப்ஸி கவர்ச்சியாக வந்து லட்சுமி தேவியின் உருவ நெக்லசை அணிந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




