பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் |
தமிழில் 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. அதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அவருக்கும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த முன்னாள் பாட்மிண்டன் வீரர், இந்நாள் இந்திய பாமிண்டன் கோச் ஆன மத்தியாஸ் போ என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை அன்று உதய்ப்பூரில் திருமணம் நடைபெற்றுள்ளது. மீடியா வெளிச்சமில்லாமல், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு முன்பாக சில தினங்கள் திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், நடிகர் பவைல் குலாட்டி, உள்ளிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள். திருமணக் கொண்டாட்டங்களின் போது கலந்து கொண்ட சில நண்பர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. டாப்ஸியின் திருமணப் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.