ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா | வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69' | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி |
கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் கேரளாவில் மட்டுமல்ல அதற்கு அதிகமான வரவேற்பை தமிழகத்திலும் பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் மூலம் வெளிச்சம் பெற்ற குணா குகையை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டு இருந்ததும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு என்கிற பாடலும் இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்ததும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மேலும் காதலுக்காக எழுதப்பட்ட இந்த பாடல் இந்த படத்தில் நட்புக்காக பயன்படுத்தப்பட்டிருந்த விதம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் இந்த படத்தை பார்த்து ரசித்ததுடன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவும் படத்தின், தயாரிப்பாளருமான நடிகர் சவுபின் சாஹிர் தற்போது கமலை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது படத்தின் ஒளிப்பதிவாளர் சைஜு காலித்தும் உடன் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலை மஞ்சு மேல் பாய்ஸ் பட குழுவினர் சந்தித்தபோது சவுபின் சாஹிர் வேறொரு படப்பிடிப்பில் இருந்ததால் அந்த சமயத்தில் அவரால் கமலை சந்திக்க முடியவில்லை என்பதால் சற்று தாமதமாக அவரை சந்தித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சவுபின் சாஹிர், துல்கர் சல்மானின் நண்பனாக பல படங்களில் இணைந்து நடித்துள்ளதுடன் அவரை வைத்து பறவ என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.