10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த ரெபல் என்ற படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. அடுத்து ஏப்ரல் நான்காம் தேதி அவர் நடித்துள்ள ‛கள்வன்' என்ற படம் திரைக்கு வருகிறது. பி.வி.ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் இவானா, பாரதிராஜா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். வனம், யானை வாழ்விடம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை அடுத்து ஏப்ரல் பதினொன்றாம் தேதி ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள இன்னொரு படமான ‛டியர்' திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டியர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.