சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கி உள்ளார் சிவா. திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகிபாபு, நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டீசர் வெளியான நிலையில், விரைவில் பாடல்களும் வெளியாக உள்ளது.
கங்குவா படத்தை அடுத்து ஹிந்தியில் ரன்பீர் கபூர், வருண் தவாண் ஆகிய இருவரையும் இணைத்து தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் சிவா. இதுதொடர்பாக தற்போது அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த படத்தை முடித்ததும் மீண்டும் அஜித் நடிக்கும் 64வது படத்தை இயக்கப்போகிறாராம்.