பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

'லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படம் ரஜினியின் 171வது படம். இது பற்றிய தகவலை லோகேஷ் ஏற்கெனவே பகிர்ந்திருந்தார். அப்படத்திற்கான திரைக்கதை எழுதும் வேலைக்காகவே அவர் சமூக வலைத்தளங்களை விட்டும் விலகியிருந்தார்.
இதனிடையே, ஸ்ருதிஹாசன் ஜோடியாக 'இனிமேல்' என்ற ஆல்படத்தில் நடித்துள்ளார். அது இன்று வெளியானது அதன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது 'கைதி 2' படம் பற்றியும், ரஜினி 171 பற்றியும் ஒரு அப்டேட் கொடுத்தார்.
ஜுன் மாதம் முதல் ரஜினி 171 படப்பிடிப்பு ஆரம்பமாகும். அதை முடித்த பின் 'கைதி 2' படத்தை இயக்கப் போவதாகவும் தெரிவித்தார். 'இனிமேல்' ஆல்பத்தில் நடித்தது கமலுக்காகவும், ஸ்ருதிஹாசனுக்காகவும் மட்டுமே. தன்னுடைய கவனம் எப்போதும் இயக்கத்தில் மீது மட்டும்தான் என்றும் கூறினார்.




