கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

கமல்ஹாசன் தயாரிப்பில், அவரே பாடல் வரிகள் எழுத உருவாகி உள்ள இசை ஆல்பம் ‛இனிமேல்'. கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஆல்பத்திற்கு இசையமைத்து பாடி, நடித்துள்ளார். அவருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் நடித்துள்ளார். ஏற்கனவே இந்தபாடலுக்கான முன்னோட்டம் வெளியானது. அதில் லோகேஷ், ஸ்ருதி இருவரும் அவ்வளவு நெருக்கமாக நடித்தனர்.
இதை வைத்து நிறைய மீம்ஸ்களும், விமர்சனங்களும் வந்தன. குறிப்பாக லோகேஷை குறிப்பிட்டு நடிகை காயத்ரி, ‛‛உங்க படத்துல ஹீரோயின் ரொமான்ஸ் செய்தால் தலையை வெட்டுவீங்க ஆனா நீங்கள்... என்ன லோகேஷ் இது'' என கலாய்த்து இருந்தார்.
இந்நிலையில் இந்த ஆல்பம் இன்று வெளியிடப்பட்டது. இந்தக்காலத்து ஆண் - பெண் இடையே ஏற்படும் காதல், அவர்களுக்கு இடையேயான ரொமான்ஸ், நெருக்கம், திருமணம் பின்னர் துவங்கும் சிறுசிறு மோதல்கள் பெரிதாக மாறி பிரிவது மாதிரியான காட்சிகளை உள்ளடக்கி இந்த ஆல்பம் எடுக்கப்பட்டுள்ளது. லோகேஷ், ஸ்ருதி இருவரும் இயல்பாய் நடித்துள்ளனர். ஆங்கிலம் கலந்த தமிழ் உடன் ஸ்ருதியின் ஸ்டைலான குரல் தனித்துவமாக தெரிகிறது.