'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை படமாக்கும் போக்கு சமீப காலமாகவே அதிகரித்து விட்டது. நடிகர் கமலும் கூட இதில் விதிவிலக்கு இல்லை என்று சொல்லும் விதமாக அவருடைய இந்தியன் 2 படத்தில் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. அதேபோல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த இரண்டாம் பாக சீசனில் வேட்டையாடு விளையாடு படத்திற்கும் இரண்டாம் பாகம் உருவாகுமா என்கிற கேள்விக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் கூறியுள்ளார் கவுதம் மேனன்
இதுபற்றி அவர் கூறும்போது, “வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் எனக்கு அற்புதமான ஒத்துழைப்பு தந்தார். சில காட்சிகளில் அவர் திருத்தம் சொன்னாலும் அது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. அந்த வெற்றிக்கு பிறகு அவருடன் ஏன் இணையவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக இருக்கிறது. அதை அவரிடமும் கூறிவிட்டேன்.
ஆனால் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் பிரச்சனை, வேறு எந்த பட வேலைகளையும் துவங்கவிடாமல் தடையாக இருக்கிறது. இதை ரிலீஸ் செய்துவிட்டு கமலின் தேதிகள் தோதாக அமையும் பட்சத்தில் நிச்சயமாக வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை துவங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார் கவுதம் மேனன்.