மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
தமிழில் 'ஆடுகளம்' படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. தெலுங்கில் 2010ல் அறிமுகமானவர் அதற்கடுத்த ஆண்டே 'ஆடுகளம்' படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துக் கொண்டே ஹிந்தியிலும் கால் பதித்தார். அங்கு தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
அவருக்கும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவருக்கும் காதல் என செய்திகள் வெளியானது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் சொன்னார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் 'தனக்கு கடந்த வருடமே திருமணம் நடந்துவிட்டது. அதைப் பற்றி நான் எந்தத் தகவலையும் வெளியிடாமல் மறைத்துவிட்டேன்,' என்று தெரிவித்துள்ளார்.
“கடந்த வருடம் டிசம்பர் மாதம் எனக்கு திருமணம் நடந்துவிட்டது. அதைப் பற்றி நான் வெளியில் சொல்லாததால் யாருக்கும் தெரியாது. இன்று நான் இதைச் சொல்வேன் என்பது கூட யாருக்கும் தெரியாது. எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தனித்தே வைத்திருக்க விரும்புகிறோம். 2013ம் ஆண்டு முதலே அவரை எனக்குத் தெரியும், என்னைப் பற்றி எல்லாமே அவருக்குத் தெரியும்,” என்றும் கூறியுள்ளார்.
இந்திய பாட்மிண்டன் அணிக்கு கோச் ஆகப் பணிபுரிந்துள்ளார் மத்தியாஸ் போ.