விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

தமிழ் சினிமாவில் ‛மெஹந்தி சர்க்கஸ்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் கோவையை சேர்ந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்த நிலையில் தனது கேட்டரிங் சர்வீஸ் மூலமாகவும் அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதின் மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் மத்தியில் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே கோவையை சேர்ந்த ஸ்ருதி என்பவருடன் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். ஆனாலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டதுடன் மேலும் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இப்படி விவாகரத்து பெறுவதற்கு முன்பே இன்னொரு திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனாலும் இந்த புகைப்படங்கள் எதுவுமே அவர் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை என்பதும் பேசு பொருளானது. மேலும் அவரது மனைவி ஸ்ருதி, தான் இப்போதும் மாதம்பட்டி ரங்கராஜின் அதிகாரப்பூர்வ மனைவி என்று இதற்கு பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் தான், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜும் முதல் மனைவி ஸ்ருதியும் ஒன்றாக கலந்து கொண்டது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் நிகழ்ச்சியில் நடப்பவற்றை கவனிப்பது போலத்தான் அந்த போட்டோ இருக்கிறது. அதே சமயம் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இருவரும் தனித்தனியாக தங்களது கார்களில் வந்தார்கள் என்பதும், இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் காரணமாகவே இவர்கள் இணைந்து பங்கேற்று உள்ளார்கள் என்பதையும் இந்த படம் சொல்லாமல் சொல்கிறது.